தனது பிறந்த நாளை மாற்றி மாற்றி கூறி 35 பெண்களிடம் விலை மதிப்புள்ள பரிசுகளை பெற்ற இளைஞன் கைது…!
தனது பிறந்த நாளை மாற்றி மாற்றி கூறி 35 பெண்களிடம் விலை மதிப்புள்ள பரிசுகளை பெற்ற இளைஞன் கைது.
ஜப்பானை சேர்ந்த இளைஞர் தகாஷி மியாகாவா. இவருக்கு வயது 35. இவர் பெண்களிடம் தனது பிறந்தநாளை ஒவ்வொரு மாதத்திலும் மாற்றி மாற்றி அதாவது போலியான பிறந்தநாளை கூறி அவர்களிடம் இருந்து, விலை மதிக்க தக்க பரிசுகள் போன்றவற்றை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனது பிறந்த நாள் பெப்ரவரி 21 என்று 47 வயதான ஒரு பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் 40 வயது பெண்ணிடம் தனது பிறந்தநாள் ஜூலை மாதம் என்று தெரிவித்துள்ளார். பின் மற்றொரு பெண்ணிடம் ஏப்ரல் மாதம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இவரது உண்மையான பிறந்தநாள் நவம்பர் 14.
இவ்வாறு அவர் 35க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனது பிறந்தநாளை மாற்றி மாற்றி கூறி அவர்களிடம் இருந்து 100,000 ஜப்பானிய யென் (ரூ .69,442) மதிப்புள்ள பிறந்தநாள் பரிசு மற்றும் உடைகள் மற்றும் ரகங்களை பெற்றுள்ளார். மியாகாவா இந்த பெண்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவது மட்டுமல்லாமல் அவர் அதனை லாபத்துக்கு விற்கவும் முயன்றுள்ளார். இவ்வாறு இவர் ஏமாற்றுவது பெண்களுக்கு தெரியவந்த நிலையில், இதனை அறிந்த பெண்கள் அவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.