இயக்குனர் ஜிபித் ஜார்ஜ் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கேரளாவில் வெளியான மலையாள திரைப்படம் கோழிபேரு. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படம் தியேட்டர்களில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் மீண்டும் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜிபித் ஜார்ஜ் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்ததாக தகவல் வெளியானது. 30 வயதான ஜிபித் கொச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் போகும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக உடலை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் படம் வெளிவந்தும் ஊரடங்கு காரணமாக படம் பாதியில் நின்றதால் ஜிபித் யாரிடம் பேசாமல் தனியாக இருந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…