டேட்டிங் ஆப் மூலம் சிக்கிய அமெரிக்க பெண்.! 5 நாட்கள் பசி-பட்டினியோடு பாலியல் கொடுமை.!
அமெரிக்காவில் ஒரு பெண் டேட்டிங் ஆப் மூலம் சிக்கி 5 நாட்கள் பசி பட்டினியோடு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் .
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் அமெரிக்க டேட்டிங் செயலியான பம்பில் மூலம் ஒரு ஆணை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அந்த நபரை, டேட்டிங்கிற்காக பெண் சந்தித்துள்ளார்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை கடத்தி சென்று டிசம்பர் 29ஆம் தேதி வரையில் தண்ணீர், சாப்பாடு கூட சரிவர கொடுக்காமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார். இந்த சம்பவம் பிறகு அமெரிக்க செய்திதாள்களில் வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.