80 வருடங்களுக்குப் பின் கிடைத்த திருமண மோதிரம்.!
ஜெர்மனியில் கழிவறையில் தவறவிடப்பட்ட திருமண மோதிரம், 80 வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட இருக்கிறது.
மார்க்கரெட் ஹெர்லாக் என்ற பெண்ணின் திருமண மோதிரம், அவரது வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து காணாமல் போயி ருக்கிறது. இது நடந்தது 1940-ம் ஆண்டு இதுகுறித்து தனது மகள் ரோஜா கல்ட்னரிடம் கூறி வருத்தப்படுவது மார்க்கரெட்டின் வழக்கம். மேலும் அவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தனது 87-வது வயதில் இறந்தார்.
இந்நிலையில், மெட்டல் டாக்டர் உதவியுடன் பொருட்கள் தேடுவதை வழக்கமாகக் கொண்ட சிலர், அந்த மோதிரத்தை பீலீட்ஜ் என்ற நகரத்தில் உள்ள பழத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர். அந்தத் திருமண மோதிரத்தில் எச் எச் என்றனழுத்துகளும், 30.3.1940 தேதியும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் இது யாருடையது என்பதை அறிவதற்காக திருமணப்பதிவு அலுவலுகத்தில் விசாரித்துள்ளனர், அது யாருடையது என்று அதை கண்டுபிடித்தவர்கள், அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த தேதியின் அடிப்படையில்1940-ம் ஆண்டு மார்ச் மாதம் தேதி திருமணம் செய்து கொண்ட ஒரே ஜோடி ஹெர்லாக்-மார்க்கரெட் பெச்னர் என்பது தெரிய வர , மோதிரத்தை மார்க்கரெட் மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
80வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தாயின் தின மோதிரம் தனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் சொன்ஜா.