சுனாமி எச்சரிக்கை : அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!
அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா தீபகற்பம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் 800 கிலோ மீட்டர் நீள தீபகற்ப பகுதியின் அருகே உள்ள கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக அலாஸ்கா மாகாணத்தின் பெரிவில் நகரின் 96 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 46.7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து இரு பெரிய நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அவை 6.2 மற்றும் 5.6 என்ற அலகுகளில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா பகுதியின் அருகே உள்ள குவாம் மற்றும் சமோவா பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.