11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல் இல்லாத டைனோசர் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.!

Default Image

11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார்.

இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், வளர்ந்த பிறகு அதிகமாக மாமிசங்களை இந்த வகை டைனோசர்கள் சாப்பிடாது என கூறப்பட்டுள்ளது.  

இந்த டைனோசர் 2மீ உயரம் கொண்டது எனவும், டி-ரெக்ஸ் ( T-rex )  எனப்படும் வகையை சார்ந்தவை என கூறப்படுகிறது. இவை, அர்ஜென்டினா பகுதியில் சுற்றிவந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இதே போன்ற டைனோசர் இனங்கள் சீனா மற்றும் தார்சானியாவில் கண்டறியப்பட்டிருந்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த இன டைனோசர் கண்டறியப்பட்டுள்ள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்