கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயது பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் நாம் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். குறிப்பாக, மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் வித்தியாசமாக பிறப்பது அல்லது குறை மாதத்தில் ஆரோக்கியமாக பிறப்பது எல்லாமே தினமும் நிகழக்கூடிய ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்து வருகிறது.
தற்போதும் பிரிட்டனைச் சேர்ந்த திருமணமாகிய 20 வயது பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், தனது ஆறு மாதத்திலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்துள்ளார். மேலும் இவருக்கு மாதவிடாயும் சரியாக ஒவ்வொரு மாதமும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு குழந்தை இருப்பது போன்று வயிற்றில் ஒரு உணர்வோ அல்லது வயிறு வெளிப்புறம் பெரிதாகவோ காணப்படவில்லையாம். ஆனால் திடீரென இவருக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் வந்து அவளுக்கு பிரசவம் பார்த்ததுள்ளனர். இந்தப் பெண்ணிற்கு 6 மாத வளர்ச்சி கொண்ட குழந்தையாக இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக இருந்து உள்ளது. இது மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…