ஜோதிகா சொன்னதை கேட்டு ஆசிரியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்காக வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார்
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டத்தில் இளைஞர்களின் பேவரட்டாக இருந்தவர் தான் மற்றும் ஜோதிகா.பலமுன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கமல், மாதவன் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்கள்.இவர் பூவெல்லாம் கேட்டுபார் என்ற தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களை நடித்து பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அதன் பின்னர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பம், பிள்ளைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அதனையடுத்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற ரீமேக் படத்தின் மூலம் திரும்பவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா, அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் விருது வழங்கும் விழாவில் கோவில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். ஏனெனில் அவையாவும் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்றும், இல்லாதவர்களுக்கு உதவி செய்வது கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையே என்றும் கூறியுள்ளார்.இதனால் பல சர்ச்சைக்களுக்குள் சிக்கினார் ஜோதிகா. சிலர் கண்டனமும், சிலர் ஆதரவும் தெரிவித்தும் வந்தனர். இந்த நிலையில் தற்போது ஜோதிகா சொன்னதை கேட்டு ஆசிரியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்காக வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…