ஆஸ்திரேலிய கடற்கரையில் “சுறா” தாக்கி ஒரு அலை சறுக்கு வீரர் மாயம்.!

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் நேற்று சுறா மீன் தாக்கப்பட்டு ஒரு அலை சறுக்கு வீரர் காணவில்லை.
இந்த சம்பவம் நேற்று காலை ஆஸ்திரேலியா எஸ்பெரன்ஸ் அருகே கெல்ப் பெட்ஸ் கடற்கரையில் ஏழு மணி நேரமாக அலை சறுக்கு பயணத்தில் சுறாவால் தாக்கப்பட்டார் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள அலை சறுக்கு வீரர் (Surfer) ஒருவர் அந்த நபருக்கு உதவ முயன்றார், ஆனால் அவரை தண்ணீரிலிருந்து இழுக்க முடியவில்லை என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் மார்க் மெகுவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சுறா தாக்குதலில் சர்போர்டு கரை ஒதுங்கியது. ஆனால், அந்த நபரை இன்னும் மீட்கவில்லை. இந்நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை ஆஸ்திரேலிய கடலில் ஆறு அபாயகரமான சுறா தாக்குதல் நடந்துள்ளதாக ஆஸ்திரேலியா பராமரிக்கும் மையம் கூறியது.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025