பூங்காவில் சரமாரியாக கத்தி குத்து!8 குழந்தைகள் உள்பட19 பேர் காயம்: 2 பேர் பலி
ஜப்பானில் கவாசாகி நகரில் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஓன்று அமைத்து உள்ளது.அப்பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பூங்காவில் இருப்பது வழக்கம்.
அந்த பூங்காவில் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கு இருந்த குழந்தைகள் பெரியவர்கள் என கூட பாராமல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 19 பேரில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர் .