Pakistan [file image]
பாகிஸ்தான் : அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 28 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, வாசுக் நகரில் திடீரென பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற விபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…