பாகிஸ்தானில் வேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது .. 28 பேர் உயிரிழப்பு.!

Pakistan

பாகிஸ்தான் : அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 28 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ​​வாசுக் நகரில் திடீரென பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற விபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja