மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர்! ராணுவ வீரரின் உடல் நாளை தமிழகம் வருகை !

Default Image

மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் நாளை தமிழகம் வருகை.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பங்கிராஜின் மகன் மணிகண்டன்(26). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாகவே துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த மார்ச் 7-ம் தேதி, இரவு 8 மணியளவில், தாகூர்கன்ஞ் மாவட்டம் பீகார் – நேபாளம் எல்லையில் உள்ள , கக்கட்டியா சோதனை சாவடியில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட  போது, வாகனத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து மணிகண்டன் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முற்பட்ட போது, மணிகண்டனையும், உடனிருந்த ராணுவ வீரர்களையும், மாடுகடத்தல் கும்பல் தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் மணிகண்டன், சிலிகுரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மணிகண்டனின் உடல் திருவனந்தபுரம் வழியாக கொண்டு வரப்பட்டு, நாளை காலை முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்