சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய ஒரு கப்பல்..! பாதை மூடல்..!
எகிப்தின் சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல் என்ற கப்பல் சிக்கியது.
கடந்த வியாழக்கிழமை உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல்( coral crystal ) என்ற கப்பல் சூயஸ் கால்வாயின் இரட்டைப் பாதையில் சிக்கியது. அதன் பிறகு மற்ற கப்பல்கள் மற்ற பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோரல் கிரிஸ்டல் சிக்கியதால் அந்த பாதை தற்போதைக்கு மூடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோரல் கிரிஸ்டல் கப்பலில் 43,000 டன் எடை இருந்தது. இந்த கப்பல் போர்ட் சூடான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாயில் இதுபோன்ற கப்பல் சிக்கியது இது முதல் முறை அல்ல, இதுபோன்ற சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற மாபெரும் சரக்குக் கப்பல் சுமார் ஒரு வாரம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோரல் கிரிஸ்டல் கப்பல்:
கோரல் கிரிஸ்டல் கப்பல் 2012 ஆம் ஆண்டில் சுமார் 225 மீட்டர் (738 அடி) நீளமும், 32 மீட்டருக்கும் (104 அடி) அகலமும் கொண்டது. இந்த பாதையில் இந்த கப்பல் பல முறை சூடான் சென்று வருகிறது. ஆனால் இந்த முறை கப்பல் சிக்கி கொண்டது.