இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் பிறந்த அபூர்வமான பூனைக்குட்டி!
இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் பிறந்த இந்த பூனைக்குட்டியை கால்நடை மருத்துவரான, ரால்ப் டிரான் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனைக்குட்டியை மருத்துவர்கள் கிப்ரோசோபஸ் என்று அழைக்கின்றனர்.
அபூர்வமான வகையில் பிறந்த இந்த பூனை குட்டிகள், மற்ற பூனைகளை போலவே ஆரோக்கியமாக உள்ளனர். இந்த பூனைகள் தங்களது இரண்டு வாய்க்களாலும் சாப்பிடுவதாக ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த பூனையை தத்தெடுத்த கால்நடை மருத்துவர் இந்த பூனைகளை பற்றி கூறுகையில், ஆரம்பத்தில் இந்த பூனைகளுக்கு உணவளிப்பது கடினமாக இருந்தது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் குழாய் மூலம், பூனைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என கூறியுள்ளார்.
மேலும், பூனைக்கு குட்டியின் மைய கண்கள், மயக்க மருந்துக்கு போதுமான எடை அதிகரித்த பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஒரு முகத்தை அகற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.