அதிர்ச்சி…பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை A.Q. கான் காலமானார்…!
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை A.Q. கான் இன்று காலமானார்.
பாகிஸ்தானின் ‘அணுசக்தித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அப்துல் காதீர் கான் என்ற A.Q.கான் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85.இஸ்லாமாபாத்தில் உள்ள கான் ஆராய்ச்சி ஆய்வகங்கள் (KRL) மருத்துவமனையில் காலை 7.00 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) கான் காலமானார்.
அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அதிகாலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்,AQ கான் மரணம் குறித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தேசத்துக்கான அவரது சேவைகளை பாகிஸ்தான் என்றென்றும் கௌரவிக்கும்! நமது பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதில் அவர் செய்த பங்களிப்பிற்காக நாடு அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
Deeply grieved at the sad demise of Dr Abdul Qadeer Khan. Great loss! Pakistan will forever honor his services to the nation! Nation is heavily indebted to him for his contributions in enhancing our defence capabilities.— Pervez Khattak (@PervezKhattakPK) October 10, 2021