சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்.!

பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையிலிருந்து ஏராளமான பலர் வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவையே ஆட்டி படைத்து முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் வலம் வருபவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் என பலரை சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் இவருக்கு இப்போதே ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. அதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மகாபாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அது மட்டுமின்றி பாலாஜி சக்திவேல் இயக்கிய ஒரு படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.