ஒரு பயணியுடன் 4,000 கி.மீ பறந்த விமானம்…! இதன் பின்னணி என்ன…?

Default Image

இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது.

இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது. ஒரு போயிங் 737 விமானத்தில் 160 பயணிகளை இரண்டு வகுப்பு வடிவத்தில் அமர வைக்க முடியும், இருப்பினும், இந்த விமானம் ஒரு பயணிகளை மட்டுமே கொண்டு சென்றது.

ஏனென்றால், மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை, இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வருவதற்காக, எல் அல் விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு  சென்றுள்ளது.

பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 14:20 மணிக்கு புறப்பட்டு 17:22 மணிக்கு காசாபிளாங்காவில் தரையிறங்கியது. ஆறு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. மேலும், 19:10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முன்னதாக டெல் அவிவில் தரையிறங்கியது. திரும்பும் பயணம் ஐந்து மணி ஆகியுள்ளது.

இஸ்ரேல் தேசிய விமானத்தின், உள்ளூர் விமான நிருபர் இட்டே புளூமென்டல், இதுகுறித்து கூறுகையில், எல் அல், விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை (எல்.ஒய் 5051) மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்