100 பயணிகளோடு புறப்பட்ட விமானம்…2 மாடி கட்டிடத்தில் மோதி கோர விபத்து
- கஜகஸ்தானில் விமான நிலையம் அருகே2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி கோர விபத்து
- 15 பேர் பலி 66 பேர் காயம் என்று தகவல் வெளியாகியுள்ளது
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து அந்நாட்டின் தலைநகர் நுர்சுல்தன் நகரை நோக்கி பயணிகள் விமானம் ஆனது புறப்பட்டது. தலைநகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில் 95 பயணிகள் மற்றும் 5 விமான பணிபெண்கள் என்று மொத்தம் 100 பேர் பயணிக்க தயாரகி இருந்தனர். சரியாக விமானம் புறப்பட்ட சிலமணி நேரத்திற்குள் விமான நிலையத்தின் அருகிலேயே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது.
சம்பவ இடத்திற்கு வந்த அவசர உதவி மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் விரைந்து ஈடுபட்டனர்.விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பயணித்த பயணிகளில் 66 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் அதிலும் சிலரின் நிலைமை மிகவும்கவலைகிடமாக உள்ளது என்று தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.இந்த விபத்து அந்நாட்டு மக்களிடையேயும் பயணிகளின் உறவினர்யிடையேயும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.