உயிர் பிழைக்க கடினம்…..உலகையே எச்சரிக்கும் புதிய ஆட்கொல்லி வைரஸ்… கதிகலங்கும் மக்கள்…!!
தென் அமெரிக்கா , சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தற்போது புதியவகையான ஆட்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தென் அமெரிக்கா , சிலி , அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் நாயின் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் 22 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவலையும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.