கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி முஸ்லீம் இளைஞர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்க, அதனை மறுத்ததால் பெண்ணை கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி அவரது பெற்றோரிடம் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேட்டுள்ளார் . ஆனால் அதனை அந்த பெண்ணின் பெற்றோர்கள் நிராகரித்ததை அடுத்து முஸ்லீம் இளைஞர் கிருஸ்துவ பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
சோனியா என்ற கிருஸ்துவ பெண்ணை மூஸ்லீம் இளைஞரான ஷெஜாத் என்பவர் திருமணம் செய்து வைக்க கோரி சோனியாவின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அவருடன் ஷெஜாத்தின் தாயாரும் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் அவரது திருமண ஆசையை நிராகரித்துள்ளனர். அதனையடுத்து பெண்ணை ஃபைசான் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த நாளன்று ஃபைசனுடன் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை ஷெஜாத் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். அதனையடுத்து ஷெஜாத் அங்கிருந்து தப்பி சென்றதாகவும், பெண்ணினுடன் இருந்த ஃபைசானை ராவல்பிண்டியில் உள்ள கோரல் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் முக்கிய குற்றவாளியான ஷெஜாத்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…