அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி சோண்ட்ரா பேட்டர் என்ற 68 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.இவர் வேலை செய்யும் கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த கொலையை யார் செய்தது என காவல் துறை பல வருடங்களாக தேடி வந்தனர்.கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ஆதரங்களை மையமாக வைத்து கொண்டு காவல் துறை விசாரணை நடத்தி வந்து உள்ளனர்.
சோண்ட்ரா பேட்டர் இறப்பதற்கு முன் கடைக்கு ஒருவர் வந்து உள்ளார்.அவரது உருவம் , கைரேகை மற்றும் ரத்த மாதிரிகளை வைத்து கொண்டு காவல்துறை தீவிரமாக தேடி வந்தனர்.
இதை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்கெட் (51) என்பவர் ஒரு மருத்துவமனையில் உள்ள செவிலியர் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளார்.அந்த வேலைக்கு இவர் தேர்வு செய்யப்பட்டு பார்கெட் தன்னுடைய கைரேகைகளை பரிசோதனைக்காக சமர்ப்பித்தார்.
அப்போது சோண்ட்ரா பேட்டர் அவரை கொலை செய்யப்பட்ட கொலைக்காரன் கைரேகையும் பார்கெட் கைரேகையும் ஒன்றாக இருந்தது.இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலை வைத்து கொண்டு போலீசார் கடந்த மார்ச் மாதம் பார்கெட் வீட்டிற்கு சென்று டி என்ஏ வை பெற்று சோதனை நடத்தினர்.
சோதனையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த டி என்ஏ -வும் , பார்கெட் டி என்ஏ -வும் ஒன்றாக இருந்தது.இதையடுத்து தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.20 வருடங்கள் கழித்து கொலையாளியை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…