ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்ற மாடல் !!!!

Default Image
  • கடந்த2008-ம் ஆண்டு அறுவை சிகிக்சை மூலம் 12 கருவை தனக்குள் பொருத்திக்கொண்டார்.
  • கிளாமர் மாடலாக இருந்த நடாலி சுலேமான் தனக்கு இருந்த பழக்கங்களை பயன்படுத்தி ஆபாச படங்களில் நடிகையானார்.

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியை சார்ந்த நடாலி சுலேமான்.கடந்த 2009-ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் 8 குழந்தைகளை பெற்றார்.

இதற்கு முன்பு நடாலி சுலேமான்விற்கு 6 குழந்தைகள் இருந்தனர். தற்போது தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நடாலி சுலேமான் தான் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை கூறினார் . கிளாமர் மாடலாக இருந்த நடாலி சுலேமான் தனக்கு இருந்த பழக்கங்களை பயன்படுத்தி ஆபாச படங்களில் நடிகையானார்.

அதன் பின்பு இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் நிலைக்கு வந்தார். தனது 14 குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு தர வேண்டும் என்பதற்காக தான் இரவு விடுதிகளில் ஆபாச நடனமாட சென்றதாக நடாலி சுலேமான் கூறினார்.

ஒரு கால கட்டத்தில் தாம் போதை மருந்துக்கு அடிமையானதாகவும் , கடந்த2008-ம் ஆண்டு அறுவை சிகிக்சை மூலம் 12 கருவை தனக்குள் பொருத்திக்கொண்டார். இது அமெரிக்கா மட்டுமன்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் மருத்துவராக செயல்பட்ட மைக்கேல் காம்ராவா என்பவரின் மருத்துவ உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. 8 குழந்தைகளை பெற்றடுக்கும் அந்த நேரத்தில் 48 மருத்துவர்கள் உதவி செய்தார்கள் என நடாலி சுலேமான் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident