தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகத்தின் அனைத்து பகுதிகளிலுமே அதிகரிக்க தொடங்கி விட்டது. அதிலும் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யக்கூடிய ஆண்களுக்கு சிறை தண்டனை கொடுத்து விட்டு சில நாட்களில் வெளியே அனுப்புவதால் அவர்கள் அச்சம் சற்றும் இன்றி சாதாரணமாக மீண்டும் அதே தவறை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கஜகஸ்தான் நாட்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவருக்கு கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தண்டனையும் மற்ற நாடுகளில் எல்லாம் வந்தால், நிச்சயம் யாரும் இவ்வாறு ஒன்றை யோசிக்க கூட மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது அவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் ரசாயன ஊசி செலுத்தப்பட்டு, அவரது ஆண்மை அகற்றப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நடக்க முடியாமல் வலியால் துடித்த அந்த நபர், தன்னுடைய எதிர்காலம் போய்விட்டதாகவும், திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கருதியதாகவும், ஆனால் இப்படி ஆகி விட்டதால் என்னுடைய நிலைமை எதிரிக்கு கூட வரக் கூடாது எனவும் அழுது புலம்பியுள்ளார். இவ்வாறு தானே மற்றவர்களும், குழந்தைகள் பெற்று வளர்க்கலாம் என்று தானே பெற்றிருப்பார்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் பொழுது அவர்களது வலி உங்கள் அதை விட அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற தண்டனை சட்டம் வரும்பொழுது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்பதை விட, இல்லாமல் போகும் என்றே கூறலாம்.