மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .டிரைலர் நாளை வெளியிடப்பட உள்ளதாக முகேஷ் சாப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Dil Bechaara’ படத்தின் போஸ்டருடன் அறிவித்திருந்தார்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும் ,கிஸி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனாவும் நடித்துள்ளனர் . புற்றுநோய் சிகிச்சை பெறும் சஞ்சனாவை காதல் செய்யும் சுஷாந்த் சிங்,ஏ மேஜிக்கல் லவ் ஸ்டோரியான இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் #DilBecharaTrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…