காட்டிற்குள் சுற்றுலா சென்ற குடும்பம்.. கதவை திறந்து லிப்ட் கேட்ட சிங்கம்!!
தென்னாபிரிக்கா காட்டிற்குள் காரில் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று காரின் கதவை திறந்து அவர்களுக்கு அதிர்ச்சி குடுத்தது. தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அந்த குடும்பத்தினர் காரிலிருந்து சிங்கங்களை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண் சிங்கம், அந்த குடும்பத்தினரின் சஃபாரி வாகனத்திற்கு அருகில் நடந்து வந்தது.
The lioness wants to go on a safari ride????
It opens the door & asks for a lift. This can also happen to you in your next safari. Maintain safe distance from wild animals. pic.twitter.com/mqIpnyPi1n
— Susanta Nanda IFS (@susantananda3) May 21, 2020
அப்பொழுது திடீரென அந்த வாகனத்தின் கதவை திறந்து, வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகளை பயம்முறுத்தியது. இந்த வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் “அந்த பெண் சிங்கம் சுற்றுலா செல்ல விரும்புகிறது. அது கதவை திறந்து லிப்ட் கேக்கிறது. இதுபோல நீங்களும் சஃபாரி செல்லபோதும் நிகழலாம். காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பப்பையும், தூரத்தையும் கடைபிடிக்கவேண்டும்” என கூறினார்.