மியான்மரில் கல்வெட்டும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. 50 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

மியான்மரில் உள்ள கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மண் குவியல் தொழிலாளர்கள் மீது விழுந்தது. அந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கு மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

அந்த விபத்தில் இதுவரை 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்த நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறுகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து கூறுகையில், அந்த பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
Surya

Recent Posts

இனிமேல் என் பெயர் இது தான்! ஜெயம் ரவி திடீர் அறிவிப்பு..காரணம் என்ன?

இனிமேல் என் பெயர் இது தான்! ஜெயம் ரவி திடீர் அறிவிப்பு..காரணம் என்ன?

சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை…

27 minutes ago

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…

1 hour ago

கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…

1 hour ago

“யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான்”…புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…

2 hours ago

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான் ..!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…

2 hours ago

களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…

3 hours ago