ஏ. எல். விஜய்யின் கைகளில் பிஞ்சு குழந்தை.! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே.!

Default Image

தலைவா பட இயக்குநரான ஏ. எல். விஜய் அவர்களின் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.. 

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் உதயாவின் சகோதராவர். முதலில் இவர் பிரியதர்ஷன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து தலயின் கீரிடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார். அதனையடுத்து 2014ல் நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 

அதன் பின் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியிருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விஜய்யின் சகோதரரான உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய்யின் குழந்தையின் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது அப்பாவுடன் இருக்கும் அந்த கியூட்டான குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்