உலகின் முதல் பறக்கும் பைக்…விலை எவ்வளவு தெரியுமா?..!

Default Image

உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,பறக்கும் பைக்குகளை ஜப்பானை தளமாகக் கொண்ட அலி (ALI Tech) டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.அந்த வகையில்,உலகின் முதல் பறக்கும் பிராக்டிகல் ஹோவர் பைக் மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .அதன் பெயர் எக்ஸ்டுரிஸ்மோ என்று அழைக்கப்படுகிறது.மேலும்,அதன் இயக்கம் குறித்து நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அலி டெக்னாலஜிஸ் நிறுவனம்,அக்டோபர் 26 முதல் எக்ஸ்டுரிஸ்மோ (XTURISMO) லிமிடெட் பதிப்பிற்கான முன்பதிவை ஏற்கத் தொடங்கியுள்ளது .எனினும், நிறுவனம் இந்த பறக்கும் பைக்குகளின் 200 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளது.வரி மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் உட்பட இதன் விலை 77.7 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.5.10 கோடி) ஆகும்.

எக்ஸ்டுரிஸ்மோ பறக்கும் பைக் அல்லது ஹோவர்பைக் பெட்ரோலில் இயங்கும் உள்எரிப்பு இயந்திரத்துடன் மின்சாரத்தில் இயங்குகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் பைக்கின் முழு மின்சார பதிப்பை வெளியிட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

எக்ஸ்டுரிஸ்மோ பறக்கும் பைக்கின் எடை சுமார் 300 கிலோ ஆகும்.இது 3.7 மீட்டர் நீளம், 2.4 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் உயரம் கொண்டது.ஒரு பைலட் மட்டுமே இந்த பைக்கில் அமர முடியும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி,30 முதல் 40 நிமிடங்கள் வரை பைக் பறக்கும் . ஹோவர்பைக்கின் அதிகபட்ச வேகம் இதுவரை நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை என்றாலும்,மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடையதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக,அலி டெக்னாலஜிஸின் தலைவர் டெய்சுகே கட்டனோ கூறுகையில்: “நாங்கள் 2017-ல் ஹோவர்பைக்குகளை உருவாக்கத் தொடங்கினோம். எதிர்காலத்தில் காற்று இயக்கம் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் முதலில் இது சுற்றுகள்,மலைப் பகுதிகளில் பயன்படுத்தப்படும்”,என்று கூறினார்.

இந்த லிமிடெட் எடிஷன் பறக்கும் பைக்குகளின் முதல் யூனிட்களின் டெலிவரி அடுத்த ஆண்டு முதல் பாதியில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்