திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 40 வினாடிகள் இருந்தவர்;உயிர்பிழைத்த அதிசயம்..!
- கடலுக்குள் இறால் பிடிக்க சென்ற மைக்கேல் பேக்கர்டு என்பவரை,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் விழுங்கியது.
- அதிர்ஷ்டவசமாக,40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர்பிழைத்தார்.
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்பவர்,கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றபோது,36 டன் எடையுள்ள ஒரு திமிங்கலம் அவரை விழுங்கியது.
இதனையடுத்து,விழுங்கிய 40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார்.
மேலும் இதுகுறித்து,மைக்கேல் கூறுகையில்:”நான் கடலுக்குள் இறால் பிடிக்க சென்றபோது,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் என்னை விழுங்கியது. இதனால்,நான் சுமார் 30 முதல் 40 விநாடிகளில் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்தேன்.அப்போது,நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.ஆனால்,அதன்பின்னர் திமிங்கலம் என்னை துப்பியது.
இதன்காரணமாக,நான் மிகவும் காயப்பட்டேன் ஆனால்,அதிர்ஷ்டவசமாக என் எலும்புகள் உடையவில்லை.மேலும்,உடனடியாக என்னை காப்பாற்றிய மீட்பு அணிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்”,என்று கூறினார்.