வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாவட்டத்தில் மழையின் பாதிப்பு குறித்து அறிந்து மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் லேசான தூறல் மழை ஆரம்பித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ , மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.
அதேபோல காரைக்காலில் கனமழை காரணமாக அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். கோவையில் மழையின் அளவை பொருத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…