யூனிட்டி-22 விண்கலத்தில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 6 பேர் கொண்ட குழு !!

விர்ஜின் கேலடிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு ‘யூனிட்டி 22’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் 6 பேர் விண்வெளி புறப்பட்டனர். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. அந்நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது.
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீ ஷா பாண்ட்லா விண்கலத்தில் சென்றுள்ளார். இரட்டை விமானம் 50,000 அடி உயர இலக்கை அடைந்தவுடன் யூனிட்டி-22 விண்கலம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைப்ரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத்தொடங்கி விண்வெளிக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு முன்பதிவு செய்து 400 பேர் காத்திருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஷா விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா பணியாற்றி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024