குணப்படுத்தும் சிகிச்சை… இளம் விஞ்ஞானி விருது..! இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்
கொரோனாவைகுணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி சிறுமி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கண்டுபிடிப்பிற்கு 18 லட்ச ரூபாய் ரொக்கபரிசு வழங்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிகா செப்ரோலு (வயது 14) டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் அனிகா வசிக்கிறார்.
கொலைக்கார கொரோனாவை குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020 ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை அனிகா வென்றுள்ளார்.
மேலும் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் 18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறையில் அனிகா கண்டுபிடிப்பானது சிலிகோ முறையின் மூலம் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கும் சிகிச்சைமுறையைக் கண்டறிந்தார்.
இதற்காகக்தான் அனிகாவுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு அனிகா அளித்துள்ள பேட்டியில், என்னுடைய ப்ராஜெக்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்பது தெரிந்தவுடன் ஊடங்கள் 2 தினங்களாக இதன் மீது கவனம் செலுத்தின.
எல்லோரும் விரும்புவதைப் போலவே நானும் நம்முடைய கூட்டு நம்பிக்கைகள் இக்கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனிகாவினுடைய ஆராய்ச்சி ஆனது கொரோனா வைரஸைக் குணப்படுத்தக் கூடியது தொடர்பான ஆய்வு கிடையாது.சிலிகோ முறை மூலமாக, இன்புளுயன்ஸா வைரஸின் புரதத்தைக் பிணைக்கக்கூடிய தலைமை மூலக்கூறை கண்டறிவது தொடர்பானது என்று தெரிவித்தார்.