வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தையின் செயல் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வசித்து வரக்கூடிய ஒரு நபர் வறுமை காரணமாக தனது வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடனும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், குடும்பத்தில் வறுமை அதிக அளவில் தலைதூக்கியதை அடுத்து, ஜம்பர் எனும் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார்.
இந்நிலையில், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கால்வாயில் தூக்கி எறியப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் தூக்கி வீசிய 5 குழந்தைகளில் தற்பொழுது ஒரு வயது மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகள் மட்டுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தான் பெற்ற குழந்தைகளையே வறுமை காரணமாக தந்தை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…