100 ஆண்டுகளாக விமான நிலையத்திற்கு நடுவே விவசாயம் செய்யும் விவசாயி!
100 ஆண்டுகளாக விமான நிலையத்திற்கு நடுவே விவசாயம் செய்யும் விவசாயி.
ஜப்பானில் உள்ள நரிட்டா என்ற விமான நிலையம், அங்குள்ள சர்வதேச விமான நிலையங்களில் இரண்டாவது விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு நடுவே, தகாவோ ஷிட்டா என்ற விவசாயி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார்.
விமான நிலையத்தை பொறுத்தவரையில், எப்போது இரைச்சலுடன் தான் காணப்படும், இருப்பினும் அவையெல்லாவற்ரையும் தாங்கி கொண்டு அந்த விமான நிலையத்தின் அருகே 5 குடும்பங்கள் வசித்து வருகிற அந்த 5 குடும்பத்தில் தகாவோ மட்டும் தான் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக விமான இரைச்சலுக்கு மத்தியில் அவதியுற்ற இவர், மகிழ்ச்சியாக உள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால், கொரோனா ஊரடங்கால் விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பது தான்.