சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளில் பயணத்தை துவங்கிய ரசிகர்.! விமானத்தில் வரவழைக்க ஏற்பாடு செய்த சோனு சூட்.!

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளிலையே பயணத்தை துவங்கிய ரசிகரை தனது சொந்த செலவில் விமானத்தில் வரவழைக்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார்.
சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.
இந்த நிலையில் நடிகர் சோனு சூட் அவர்களை பார்ப்பதற்காக அர்மான் என்ற பீகாரை சேர்ந்த ரசிகர் பீகாரிலிருந்து 1600 கி.மீ தூரமுள்ள மும்பைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்ட சோனு சூட், 300கி.மீ வரை பயணம் செய்த அந்த ரசிகரை வாரணாசியில் தடுத்தி நிறுத்தி விமானம் வாயிலாக மும்பைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்.அதனையடுத்து அவரை ஓட்டலில் தங்க வைத்து ,அங்கு அவரை சோனு சூட் சந்தித்த பின்னர் மீண்டும் தனது சொந்த செலவில் ரசிகரை அவரது சொந்த ஊரான பீகாருக்கு விமானம் மூலம் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025