ஒரு கப் ரவை இருந்தால் போதும், முட்டை இல்லாமல் பஞ்சுபோன்ற கேக் ரெடி!

கேக் என்றாலே முட்டையின் மனம் இருக்கும் என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால், முட்டையே இல்லாமல் பஞ்சு போல வீட்டிலேயே எப்படி கேக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- ரவை ஒரு கப்
- சர்க்கரை அரை கப்
- பால் ஒரு கப்
- தயிர் அரை கப்
- பேக்கிங் சோடா
- முந்திரி
- பாதம்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பேக்கிங் சோடா கலந்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அடுப்பில் ஒரு சட்டி அல்லது குக்கரை வைத்து 5 நிமிடம் சூடு ஏற விடவும்.
பின் ஒரு ஸ்டாண்ட் ஒன்று வைத்துக்கொண்டு, பட்டர் பேப்பர் வைத்து ஒரு கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள மாவை கொட்டி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மேலே முந்திரி பாதாம் ஆகியவற்றை தூவி மீண்டும் ஒரு 25 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். அதன்பின் எடுத்துப்பார்த்தால் அட்டகாசமான பஞ்சுபோன்ற ரவை கேக் வீட்டிலேயே தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025