Cut, Copy, Paste என்ற ஷார்ட்கட் கீ யை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் மறைவு.!
- கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்த அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவால் காலமானார்.
கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக 74வது வயதில் காலமானார். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களில் (Ctrl+C) மற்றும் (Ctrl+V) ஆகிய ஷார்ட்கட் கீ யை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. இதனிடையே ஜெராக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த சமயத்தில், வேலையை எளிமையாகச் செய்ய கண்டுபிடித்ததுதான் இந்த (Ctrl + C) மற்றும் (Ctrl + V) கட்டளைகள். அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர், கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தார்.
மேலும் தேடுவதற்கான கட்டளைகள், மீண்டும் பதிவிடுவதற்கான கட்டளை ஆகியவற்றை கண்டுபிடித்ததும் இவர்தான். இதனையடுத்து ஸ்டீவ் ஜாப்ஸ் அழைப்பின் பேரில் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த அவர், அங்கு 17ஆண்டுகள் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்தார். பின்னர் 1997-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி அமேசான் நிறுவனத்திலும் பின்னர், யாகூ நிறுவனத்திலும் பணியாற்றியவர் தனது 74 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கம்ம்யூட்டர் மென்பொருள் என்றால், பில்கேட்ஸ், ஸ்டீவ்ஜாப்ஸ் என உடனடியாக ஞாபகம் வந்தாலும், லாரி டெஸ்லர் போன்ற மகத்தானவர்களும் அதற்கு பின்னால் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.