“நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத்தளபதியாக ஜோ பைடன் இருப்பார்”- கமலா ஹாரிஸ்!
உலகை மதிக்கும் ஒரு சிறந்த தலைவரை நமது குழந்தைகள் காணப்போவதாக ஜோ பைடனை புகழ்ந்து, கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் கூட்டணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் ஜோ பைடன், ஜனவரி 20, 2021-ல் முறைப்படி அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்தநிலையில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், ஜோ பைடனை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அமெரிக்காவில் சிறந்தவர்களை பிரநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் எனவும், உலகை மதிக்கும் ஒரு சிறந்த தலைவரை நமது குழந்தைகள் காணப்போவதாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத்தளபதியாகவும், மக்களின் சிறப்பு அதிபராகவும் இருப்பார் என தெரிவித்துள்ளார்.