நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கூறிய வீடியோ வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிந்தது.
இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞரை இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர், கொரோனா பரவலால்வேலை இழந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தான் தவறாக பேசி விட்டதாக விஜய் சேதுபதியிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதானால் தன்னுடைய மகனது வாழ்க்கையே வீணாகும் என அழுதபடி அவரின் தாயாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலமாக தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தநபர் அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…