ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சாபுல் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானதாகவும் மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் சாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் கூறியுள்ளார்,
மேலும் 28 பேர் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும் அதில் பெண்கள் மற்றம் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார், இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உடனடியாக பொருப்பேற்கவில்லை என்றும், இது குறித்த கேள்விகளுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கம் மௌனம் சாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து திங்கள்கிழமை அதிகாலை, தலைநகர் காபூலுக்கு வடக்கே பர்வான் மாகாணத்தில் ஒரு குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
குறிப்பாக செப்டம்பர் 11 க்குள் ஆப்கான் எல்லையில் உள்ள தனது அனைத்து துருப்புக்களையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்த பின்னர் சமீபத்திய வாரங்களில் வன்முறை தீவிரமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வார இறுதியில் ஈத் அல் பித்ரின் மத விடுமுறைக்கு மூன்று நாள் போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக தலிபான் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் போர்நிறுத்த அறிவிப்பு வந்த பிறகு காபூலில் ஒரு பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் பெரும்பாலோர் பெண் மாணவர்கள், மற்றும் 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…