ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் மைதானத்திற்குள் நுழைந்தபோது ரஷ்ய அதிபர் புடின் தூங்கினார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 94 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
பெய்ஜிங்கில் உள்ள பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாடுகளும் அவரவர் நாட்டின் கொடி மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துகொண்டார். இந்நிலையில், உக்ரைன் விளையாட்டு வீரர்கள் குழு ஒன்று மைதானத்தில் நுழைந்தபோது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தூங்கிவிட்டார் என கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது. இதைப்பார்த்த பலர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இடத்தில் அமர்ந்து தூங்கிவிட்டாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தை பார்க்கும்போது அவரது கண்கள் மூடிய நிலையில் காணப்படுகின்றன. எனினும், அப்போது விளாடிமிர் புடின் தூங்கினாரா..? என்பது உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி குழு பெய்ஜிங்கின் தேசிய மைதானத்திற்குள் நுழைந்த நேரத்தில், புடினின் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் 2019 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியாக போட்டியிடுகின்றனர். அதாவது விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் தங்கள் கொடி அல்லது தேசிய கீதத்தை பயன்படுத்த முடியாது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து வருகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங்கை புதின் நேரில் சந்தித்தது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…