அரசு ஊழியர்கள் ‘Tik Tok’ செயலி பயன்படுத்த தடை.! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.!
டிக் டாக் செயலியை அரசாங்க ஊழியர்கள் அரசாங்க மின்னணு சாதனங்களில் உபயோகிக்க கூடாது என அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றபட்டது.
சீனாவை தலைமையிடமாக கொண்ட முக்கிய பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் செயலியானது பயனர்களின் தரவுகளை திருடுகிறது. உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை சந்தித்து, அதற்கு பதிலளித்தும் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அரசு ஊழியர்கள், அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் போது அதில், டிக் டாக் செயலியை உபயோகிக்க கூடாது என்ற மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
இதற்கு பிறகு, பிரதிநிதிகளின் சபையிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். அதன் பிறகு அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்பு இது சட்டமாகும்.