கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த 30-ம் தேதி ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியது உறுதியானது.
- குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆபரேஷன் மூலம் மருத்துவர்கள் குழந்தையை எடுத்தனர். தற்போது தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியது உறுதியானது. பின்னர் மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.
பின்னர் அன்றே மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் அந்த கர்ப்பிணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 3 கிலோவாகவும் இருந்தது. அடுத்த மறுநாள் 31-ம் தேதி குழந்தைக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது. தற்போது தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு உடல் வெப்ப நிலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
February 12, 2025![mitchell starc](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mitchell-starc.webp)
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)