கொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.!
- அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
- அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து, அந்த பணத்தை வீசி எறிந்தார் என்று கூறுகின்றார்.
இந்நிலையில், பணத்தை கொள்ளையடித்த தாடி வைத்த முதியவர், அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார், என்று சம்பவ இடத்திலிருந்து பார்த்த ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
On December 23, David Oliver was booked into the El Paso County Criminal Justice Center following a bank robbery in the 00 block of Tejon Street. Police Blotter #27498 https://t.co/CjbvRoi0Lc
Mugshot: David Oliver, 65 pic.twitter.com/lNCJAwS9jE
— Colorado Springs Police (@CSPDPIO) December 24, 2019
பின்னர் அந்த பகுதியிலிருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி கடை அருகே தைரியமாக நின்ற தாடி வைத்த முதியவர் போலீசார், கைது செய்யப்படுவதற்காகவே அந்த இடத்தில காத்திருந்தார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்ட முதியவர் 65 வயதான டேவின் வெயின் ஆலிவர் என கொலொராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை தெரிவித்தது, பின்னர் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கிலிருந்து பதிவிட்டுள்ளார்.