பத்தாயிரத்துக்கும் அதிகமானோரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது மூதாட்டி மீது வழக்கு பதிவு!
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது முன்னாள் பெண் செயலாளரான மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1943 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நாஜி முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த காலகட்டத்தில் முன்னாள் பெண் செயலாளராக ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார். அப்பொழுது நாஜியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் டான்சிங் பகுதியில் இருந்த பெண்மணி ஒருவர் முகாம் தலைவரின் செயலாளராக பணிபுரிந்துள்ளார். அந்த பெண்மணிக்கு அப்பொழுது 95 வயது தான் ஆகியிருந்ததாம். இந்த பெண்மணி இரண்டாம் உலகப் பரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்திருந்துள்ளது.
ஆனால், அப்பொழுது 21 வயதுதான் அவருக்கு ஆகியிருந்தது. எனவே சிறார் நீதிமன்ற விசாரணைக்காக விட்டுள்ளனர். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள புலனாய்வாளர்களின் விரிவான விசாரணையில் 95 வயதாகும் இந்த மூதாட்டிக்கு படுகொலையில் பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லம் ஒன்றில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.