#Shocking:35 வயதுக்கு மேற்பட்ட பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது மருத்துவர்!
ஸ்காட்லாந்தில் பயிற்சி பெற்ற 72 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர், 35 வயதுக்கு மேற்பட்ட 48 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டது நேற்று கண்டறியப்பட்ட்டுள்ளது.
கிருஷ்ணா சிங்,ஒரு பொது மருத்துவர்,இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளிடம் முத்தமிடுதல் மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து,அவரை காவல்துறையினர் கைது செய்து கிளாஸ்கோவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஆனால்,இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.மேலும்,இந்தியாவில் மருத்துவப் பயிற்சியின் போது சில தேர்வுகள் தனக்குக் கற்பிக்கப்பட்டது என்றும் கிருஷ்ணா சிங் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,வழக்கை விசாரித்த நீதிபதி,மருத்துவர் மீதான தண்டனையை அடுத்த மாதம் வரை ஒத்திவைத்து,பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிங்கை ஜாமீனில் விடுவிக்க அனுமதி அளித்துள்ளார்.
ஏற்கனவே,கடந்த 2018 இல் மருத்துவர் கிருஷ்ணா மீது ஒரு பெண் புகாரளித்ததை அடுத்து,அவரது நடத்தை குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. அதன்படி,நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் குற்றச்சாட்டுகளில் மருத்துவர் தண்டனை பெற்றார்,
மேலும்,மற்ற ஒன்பது வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை மற்றும் மேலும் இரண்டு வழக்குகளில் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இதனிடையே,மருத்துவர் சிங்,மருத்துவ சேவைகளில் ஆற்றிய சிந்த பங்களிப்பிற்காக அவருக்கு ராயல் மெம்பர் ஆஃப் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (MBE)என்ற கவுரவம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.