இன்ஸ்டா பக்கத்தை விளம்பரப்படுத்த அமெரிக்க பள்ளியில் பதுங்கியிருந்த 28 வயது பெண் கைது
புளோரிடாவில் ,இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் 28 வயதுடை பெண் டீனேஜ் போல் வேடமனிந்து பள்ளியில் பதுங்கி லைக் க்காக சிக்கிக்கொண்ட பரிதாபம்.
நாம் பொதுவாக செய்ய கூடாத விஷயங்களைச் செய்ய சமூக ஊடகங்கள் நம்மைத் தூண்டுகிறது. லைக்ஸ் மற்றம் ஷேர் போன்றவற்றை அதிகரிக்க மற்றும் பதிவிட நம்மைத் தூண்டிவிடுவதோடு மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதாக உணரவைக்கிறது, இந்த நம்பிக்கையில் போதை கொண்டது போல் சில தவறான பதிவுகளை வெளிவிடுகின்றனர்.
இப்போதெல்லாம், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் எல்லா வகையான வீடியோக்களையும் காணலாம். ஆபத்தான உணவு ஸ்டண்ட் முதல் கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடிய வைரல் சவால்கள் வரை காணமுடிகிறது.
சமீபத்தில், புளோரிடாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நுழைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஒரு மாணவராக தன்னைக் காட்டிய 28 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
ஆட்ரி நிக்கோல் பிரான்சிஸ்குவினி என்ற பெண் மே 10 அன்று ஹியாலியாவில் உள்ள அமெரிக்க மூத்த உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களைப்போல் வேடமனிந்து பதிங்கியுள்ளார். பின்னர் அவர் மாணவர்களை அணுகி, தனது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை மாணவர்களிடம் கொடுத்து தன் இன்ஷ்டா பக்கத்தை பின்தொடருமாறு கேட்டவிட்டு அங்கிருந்த லாபகரமாக சென்று விட்டார்.
இதன் பின் தகவலறிந்த பள்ளி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தனர்.அவரது இன்ஸ்டாகிராம் கணக்கைச் சரிபார்த்த போலீசார் ஆட்ரியைக் கண்காணித்த பின், ஆட்ரி வடக்கு மியாமி கடற்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.லைக்ஸ் ,ஷேர் என்ற பிசாசு இப்படியும் செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.