கால் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 25 வயது பெண்..!பரிசோதனையில் ஆண்..!

Default Image

சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். ஆனால்,பரிசோதனை முடிவில் ஆண் என தெரிய வந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாக,தான் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்கிடையில்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.ஆனால்,அதன்பின்னர் வந்த மருத்துவப் பரிசோதனை முடிவில்,உடலுக்குள் ஆண்களுக்குரிய செல் பண்புகள் இருப்பதாக தெரிய வந்ததைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து,அந்த 25 வயது பெண் மருத்துவரிடம் கூறுகையில்,”எனக்கு கணுக்காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்தேன்.ஆனால்,பரிசோதனை முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இருப்பினும்,நான் மற்றவர்களை விட மெதுவாக வளர்ச்சியடைந்ததன் காரணமாகவும் மற்றும் எனக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்ததாலும் சிறுவயதில் என் அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார்.அப்போது,இந்த பிரச்சனை வளர வளர சரியாகிவிடுமென்று மருத்துவர் தெரிவித்தார்.ஆனால்,தற்போது வரை எனக்கு மாதவிடாய் வரவில்லை.எனினும்,இதை யாரிடமும் நான் கூறியதில்லை”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,சீன மருத்துவர் டோங் ஃபெங்கின் கூறுகையில்,”சில நபர்களை பாதிக்கும் ‘இன்டர்செக்ஸ்’ என்ற ஒரு அரிய வகை நோயானது, உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.அதாவது,உடலளவில் பெண்ணாக பிறந்தபோதிலும்,உயிரளவில் ஆணாக (ஒய் குரோமோசோமும்) இருப்பதால் உடலில் கருப்பை இல்லை.அதனால்,உங்களால் கருத்தரிக்க முடியாது.

மேலும்,பெண்களுக்கு இளம் வயதில் உடலுக்குள் உருவாகும் எலும்புகளும் உங்களுக்கு உருவாகவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிகிறது.எனவே, இனி ஆணாக இருக்கவேண்டுமா? அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமா? என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்