49 நாட்கள் கடலில் தத்தளித்த 19 வயது மாணவன்..!!
49 நாட்களாக கடலில் தத்தளித்த இந்தோனேசிய இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.அந்நாட்டின் குவாம் துறைமுகத்தில் மீன்பிடிக்க உதவும், மிதக்கும் தளத்தை கடலில் நிலை நிறுத்தும் பணியில் 19 வயதான அல்டி நோவல் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நங்கூரத்தின் கயிறு அலைகள் தாக்குண்டு அறுந்து போனது. இதனால் மிதக்கும் மேடையை அலைகள் அடித்துச் செல்ல, நோவல் அதில் தனியே மாட்டிக் கொண்டார். கையில் இருந்த சூரிய ஒளி மூலம் இயங்கும், ரேடியோ கருவி மூலம் அவர் உதவி கோரி அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தார்.
இறுதியில் 49 நாட்களுக்கு பின்னர் பனமா நாட்டு கப்பல் ஒன்று அவரை மீட்டது. நடுக்கடலில் தன்னந்தனியே, அலைகளுக்கு நடுவே தவித்த தம்மை பத்து கப்பல்கள் கண்டு கொள்ளமல் விட்டதாகவும், பனாமா நாட்டு கப்பல் மட்டுமே மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.